கிணற்றில் விழுந்த மாட்டினை தீயணைப்பு துறையினரால் மீட்பு

பாப்பிரெட்டிபட்டி அருகே கிணற்றில் விழுந்த மாட்டினை துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் பாராட்டு

Update: 2025-01-07 02:09 GMT
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகில் உள்ள நடூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவரின் விவசாய கிணற்றில் நேற்று ஜனவரி 06 மாலை அப்பகுதியில் மேச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாடு தவறி விழுந்தது. தவறி விழுந்த அவரது மாட்டினை மீட்க உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு எந்த விதமான காயமும் இல்லாமல் மாட்டினை பத்திரமாக மீட்டெடுத்தனர். விரைந்து செயல்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Similar News