காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி அளவில் வினாடிக்கு 1500 கன அடியாக நீர்வரத்து சரிவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பொழியாததாலும் கர்நாடக மாநிலங்களில் உள்ள அணைகளில் இருந்து நீர் திறக்கப்படாமல் இருப்பதாலும் நீர் வரத்து நாளுக்கு நாள் சரிந்து காணப்பட்டது இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக வினாடிக்கு 1500 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது. நீர்வரத்து சரிந்து காணப்படுவதால் பல்வேறு இடங்களில் காவிரி ஆறு பாறைகளாக காட்சியளிக்கிறது மேலும் நீர் அளவு குறைந்துள்ளதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் ஆற்றின் நடுவே சென்று உற்சாகமாக குளித்தும், பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.