ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம பகுதி சாலைகள் சிதலமடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு...*

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம பகுதி சாலைகள் சிதலமடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு...*;

Update: 2025-01-07 05:55 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம பகுதி சாலைகள் சிதலமடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நொச்சிகுளம் முதல் அப்பயநாயக்கன்பட்டி, ஆலத்தூர், நக்கமங்கலம் விலக்கு வரை தார் சாலை சிதலம் அடைந்து மரண குழிகள் உள்ளன.இந்த சாலையில் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது நிலைத்திடுமாறி கீழே விழுந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .இது குறித்து பலமுறை ஸ்டாலின் அரசின் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நான்கு கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர் அவர்களை அந்த வழியாக வந்த நபர்கள் காரில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதே நிலை தொடர்ந்து நீடிப்பதாகவும் உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு சிதலமடைந்த தார் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள்,கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News