இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து
செம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது மாடு ஏற்றி வந்த லாரி மோதி கோர விபத்து, சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி செம்பட்டி போலீசார் விசாரணை
திண்டுக்கல் வத்தலகுண்டு ரோடு ஜெய்னி கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சீவல்சரகை சேர்ந்த மதன்குமார்(24) என்ற வாலிபர் மீது அந்த வழியாக மாடு ஏற்றி வந்த லாரி மோதி விபத்து. இந்த கோர விபத்தில் மதன்குமார் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் மதன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.