மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் தகுதி பெற்ற பெரணமல்லூர் பகுதி மாணவர்களுக்கு பாராட்டு.

மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டிக்கு தகுதி பெற்ற பெரணமல்லூர் பகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2025-01-09 01:35 GMT
ஆரணி, மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டிக்கு தகுதி பெற்ற பெரணமல்லூர் பகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர். பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒன்றிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தேன் சிட்டு மாத இதழ் மற்றும் பொது அறிவு சார்பான மன்ற செயல்பாடுகளின் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் தேன் சிட்டு வினாடி வினா போட்டியில் அல்லியந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் யஸ்வந்த், அவினாஷ், ராபிகாரூத், துர்கா தேவி ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில், புதன்கிழமை பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் மாலவன் தலைமையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News