கல்வி அறிவுசார்ந்த போட்டிகள் மற்றும் சிறு விழாக்கள் நடத்திட முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
அறிவு சார்மையங்களில் தன்னார்வலர்கள் மற்றும் அறக்கட்டளைகள் வாயிலாக நடத்தப்படும் போட்டி தேர்வு கருத்தரங்குகள், இலக்கியக் கூட்டங்கள் மற்றும் கல்வி அறிவுசார்ந்த போட்டிகள் மற்றும் சிறு விழாக்கள் நடத்திட முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.;
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் அறிவுசார் மையங்கள் அமைந்துள்ளன. மேற்படி அறிவு சார்மையங்களில் குறைந்த கட்டணத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அறக்கட்டளைகள் வாயிலாக நடத்தப்படும் போட்டி தேர்வு கருத்தரங்குகள், இலக்கியக் கூட்டங்கள் மற்றும்; கல்வி அறிவுசார்ந்த போட்டிகள் மற்றும் சிறு விழாக்கள் மாலை நேரங்களில் மட்டும் நடத்திட அனுமதிக்கப்படும். மேலும் முன் பதிவு மற்றும் இதர விபரங்கள் குறித்து தெரிந்;து கொள்ள சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் அவர்களை 73973-89921 என்ற தொலைப்பேசி எண்ணிலும், திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் அவர்களை, 73973-89916 என்ற தொலைப்பேசி எண்ணிலும், அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் அவர்களை, 73973-89919 என்ற தொலைப்பேசி எண்ணிலும், விருதுநகர் நகராட்சி ஆணையாளர் அவர்களை, 73973-89922 என்ற தொலைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.