சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கையில் விழிப்புணர்வு பேரணியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்*

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கையில் விழிப்புணர்வு பேரணியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்*;

Update: 2025-01-08 13:17 GMT
இந்தியாவிலேயே சாலை விபத்தால் அதிக நபர்கள் உயிரிழக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் விருதுநகர் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 500 நபர்கள் சாலை விபத்தில் உயிர் இழப்பதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் பேச்சு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கையில் விழிப்புணர்வு பேரணியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் முன்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடி அசைத்து துவக்கி வைத்து கையில் விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அவரும் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார் அதைத் தொடர்ந்து பேரணியில் 200க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும்,இருசக்கர வாகன பயனாளிகளுக்கு சாலைப் பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுரைகளையும் வழங்கினார் இந்த பேரணியானது விருதுநகர் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தொடங்கி மதுரை ரோடு,பழைய பேருந்து நிலையம் வழியாக வந்து தேசபந்து மைதானத்தில் முடிவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அவர்கள் பேசுகையில் இந்தியாவிலேய சாலை விபத்தில் அதிக நபர்கள் உயிர் இழக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் தமிழகத்தில் ஒரு ஆண்டில் 15 ஆயிரம் நபர்கள் சாலை விபத்தில் மரணம் அடைவதாகவும் விருதுநகர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு சாலை விபத்தில் 508 நபர்கள் உயிர் இறந்து இருப்பதாகவும் 2023 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 504 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 500 நபர்கள் சாலை விபத்தில் உயிர் இறந்து வருவதாகவும் சாலை விபத்தில் அதிகமாக இளைஞர்கள் உயிரிழப்பதாகவும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதாலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் தான் விபத்துகளால் உயிர் அதிகம் ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்

Similar News