சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார். அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பாக்குடி ஊராட்சி கோப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும், கண்மாய்பட்டி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.10 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர், கோசுகுண்டு ஊராட்சி கே.முத்துசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34.23 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும், கோசுகுண்டு ஊராட்சி அத்திபட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டு வருவதையும், நத்தத்துப்பட்டி ஊராட்சியில் கனிம வள நிதியின் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், நத்தத்துபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, என்.முத்துசாமிபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டு வருவதையும், முத்துசாமிபுரம் ஊராட்சி சுப்பிரமணியாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.