மனோகரா கார்னர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு. விஏஓ அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு.
மனோகரா கார்னர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு. விஏஓ அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு.
மனோகரா கார்னர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு. விஏஓ அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு. கரூர் எல் என் எஸ் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி வயது 43. ஜனவரி 7 ஆம் தேதி காலை 8- மணி அளவில், கரூர் - கோவை சாலையில் உள்ள மனோகரா கார்னர் அருகில், ராஜா டிரேடர்ஸ் கடை அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் கிடப்பதை அப்பகுதி பொது மக்கள் பார்த்து, கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமிக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த குப்புசாமி, முதியவர் உடல் கிடப்பதை உறுதி செய்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அடையாளம் தெரியாத முதியவர் உடலை மீட்டு, அடையாளம் காண்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்து, இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது உறவினர்கள் யார்? இங்கு வந்து அவர் இறப்பதற்கு என்ன காரணம்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.