நாகை மாவட்டத்தில்

16 -26 தேதிகளில் மதுபான கடைகள் மூட உத்தரவு

Update: 2025-01-09 10:14 GMT
நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டத்தில், திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, வருகிற 16 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள், எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3ஏ, எப்எல்-3ஏஏ, மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும், தமிழ்நாடு மதுபான கடைகள் மற்றும் பார்கள் விதிகளின்படியும், தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981-ன் கீழ் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால், மதுபான விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவர் அவர் கூறியுள்ளார்.

Similar News