தர்மபுரியில் கல்லூரி சந்தை ஆட்சியர் அறிவிப்பு
மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கான கல்லூரி சந்தை இன்று முதல் நடக்கிறது ஆட்சியர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தர்மபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சார்பில் 2024-2025 ஆண்டிற்கான கல்லூரி சந்தை குண்டல்பட்டி பச்சமுத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கி நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த சந்தையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களான சிறு தானிய உணவு பொருட்கள், சணல் பைகள், பாக்கு தட்டுகள், செயற்கை ஆபரணங்கள், கால்மிதியடிகள் புளி, புடவைகள், தின்பண்டங்கள், சத்துமாவு, மசாலா பொடிகள், மரசெக்கு சமையல் எண்ணெய் வகைகள், பிற உற்பத்தி பொருட்கள் இடம் பெறுகிறது. எனவே இந்த கல்லூரி சந்தையில் பொது மக்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.