தென்காசியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ஆட்சியர்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ஆட்சியர்

Update: 2025-01-09 11:25 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தென்காசி வீட்டுவசதி வாரியத்தில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (09.01.2025) தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News