கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

பேரணாம்பட்டு நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2025-01-09 11:46 GMT
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரி குத்தி ஊராட்சியில் கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பொங்கல் பரிசுத் தொகப்பு பொருள்களின் எடையை மாவட்ட ஆட்சியர் பரிசோதித்து பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது வட்ட வழங்க அலுவலர் மஞ்சுநாத் மற்றும் பேரணாம்பட்டு வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News