மோகினி அலங்காரத்தில் கூடலழகர் பெருமாள்.
மதுரை கூடலழகர் பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாள் நிறைவு நாளான இன்று ( ஜன.9) சுந்தரராஜ பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். நாளை (ஜன.10) இக் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரவு 7.15 சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் முதல் இராபத்து உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.