கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி.

கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி.

Update: 2025-01-09 12:16 GMT
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியை ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, இன்று துவக்கி வைத்து, உயர்கல்வி குறித்த வழிகாட்டி கையெட்டை மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார். உடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம.கௌரிசங்கர் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தா.பத்மலதா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்னபாலமுருகன், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி முதல்வர் வி.அனுராதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News