விருதுநகரில் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை துவக்கி வைத்து பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பிளாஸ்டிக் டயர் போன்ற பொருட்களை எரிக்காமல் காற்றை மாசுபடுத்தாமல் போகியை கொ

விருதுநகரில் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை துவக்கி வைத்து பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பிளாஸ்டிக் டயர் போன்ற பொருட்களை எரிக்காமல் காற்றை மாசுபடுத்தாமல் போகியை கொண்டாட வேண்டும்" என்றார்.;

Update: 2025-01-09 13:20 GMT
காற்றை மாசுபடுத்தாமல் போகி கொண்டாட வேண்டும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். விருதுநகரில் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை துவக்கி வைத்து பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பிளாஸ்டிக் டயர் போன்ற பொருட்களை எரிக்காமல் காற்றை மாசுபடுத்தாமல் போகியை கொண்டாட வேண்டும்" என்றார். தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோக திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில்,முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை துவக்கி வைத்தார் . இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் துவங்கியது. விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அஹமதுநகர் நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி விநியோகத்தை துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 2 ஆயிரத்து 36 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசியதாவது "பொங்கல் திருநாள் தமிழர்கள் மிக முக்கிய பண்டிகை. நம் அனைவரும் சாதி மத வேறுபாடுகளை கலந்து ஒற்றுமையாக இணைந்து கொண்டாட கூடிய பண்பாட்டு திருவிழா ஆகும். பொங்கல் பண்டிகை என்பது உழவருக்கு நன்றி சொல்லக் கூடியதாகவும் உழவுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய அனைத்திற்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லக்கூடிய திருவிழாவாகும். பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிக்கக்கூடிய நடைமுறை உள்ளது. தற்போது எதையாவது ஒன்றை எரிக்க வேண்டும் என்பதற்காக டயர், பிளாஸ்டிக் ரப்பர் போன்றவற்றை எரித்து அதிக புகையை ஏற்படுத்துகின்றனர். இது மோசமான காற்றுச் சூழ்நிலையை ஏற்படுகிறது. சுவாசிக்கக்கூடிய காற்றின் தரம் மிக மோசமாக பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அதிக நேரம் புகை வர வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் ரப்பர் டயர் போன்றவற்றை எரிக்கின்றன ர்.இது நாம் சுவாசிக்கும் காற்றிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.பழையன கழிதலும் புதியன புகுதலும் நமது மரபு. போகி பண்டிகையில் பழைய பொருட்களை எரிக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் இயற்கைக்கு காற்றிற்கு துன்பம் வராமல் அந்த விழாவை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News