ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு தேர்வு நடத்தப்பட்டது.*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு தேர்வு நடத்தப்பட்டது.*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போக்குவரத்து துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,தனியார் பள்ளிகளில் போக்குவரத்து துறை சார்பாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது .இதில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிவது மற்றும் விதிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சிறு தேர்வுகள் வைக்கப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.