ஆரணி பகுதியில் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா.
ஆரணி செயின்ஸ் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆரணி அரிமா சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஆரணி ஜெ.டி.ஆர் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.
ஆரணி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி செயின்ட் ஜோசப் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி. ஆரணி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆரணி அரிமா சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஆரணி அரிமா சங்க தலைவர் எம்.மோசஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் கே.தமிழரசி, பள்ளி முதல்வர் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவிகள் பி.பவானி, ஏ.ஹாசினி ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினர். இதில் மாணவ, மாணவிகள் பள்ளி மைதானத்தில் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மேலும் கரும்பு, மஞ்சள் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் கோலப்போட்டி, பாடல், பாரம்பரிய நடனங்கள் ஆகியவை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் மருத்துவர் ஏ.பரமேஸ்வரன், அரிமா மாவட்ட தலைவர்கள் பி.நடராஜன், சி.எஸ்.துரை, அரிமா வட்டார தலைவர் டி.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் இதில் ஆரணி அரிமா சங்க செயலாள் ஏ.எம்.முருகானந்த, பொருளாளர் கே.ஓ.பரசுராம், நிர்வாகிகள் எம்.என்.சேகர், எஸ்.குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆரணி ஜெ.டி.ஆர்.வித்யாலயா பள்ளி. ஆரணி ஜெ.டி.ஆர் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றதில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்ற கோலப்போட்டி, பல்லாங்குழி, ஐந்தாங்கல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இதில் ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.