வடகிழக்கு பருவமழை பயிர் சேத பாதிப்புகள் குறித்து ஆலோசனை
வடகிழக்கு பருவமழை பயிர் சேத பாதிப்புகள்: கணிப்பாய்வு அலுவலர் ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பயிர் சேத பாதிப்புகள் தொடர்பாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கோ.பிரகாஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று வடகிழக்கு பருவமழை 2024 பயிர் சேதம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் /முதன்மைச் செயலாளர்/ ஆணையர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கோ.பிரகாஷ், தலைமையில் துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.