பொங்கல் பரிசு வழங்கிய நகர மன்ற உறுப்பினர்
பொங்கல் பரிசு வழங்கிய நகர மன்ற உறுப்பினர்
மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வார்டில் உள்ள 1000 குடும்பத்தினருக்கு நகர மன்ற உறுப்பினர் பொங்கல் பரிசினை இலவசமாக வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு நகர மன்ற திமுக உறுப்பினராக இருப்பவர் ஜெர்லின் ஜோஸ் அவர் இன்று அந்த வார்டில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினருக்கு தனது சொந்த செலவில் பொங்கல் விழாவை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி வெல்லம் கரும்பு என அனைவருக்கும் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.