தேன்கனிக்கோட்டை: யானை மிதித்து மூதாட்டி உயிரிழப்பு.
தேன்கனிக்கோட்டை: யானை மிதித்து மூதாட்டி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள கெலமங்கலம் அடுத்த ஜக்கேரி பகுதியில் ஒன்னுகுறுக்கி பகுதியை சேர்ந்த வெங்கடேசப்பா இவருடைய மனைவி நாகம்மா (59) இவர் விளைநிலத்தில் அறுவடை செய்து கொண்டிருந்த பொது அந்த பகுதியில் சுற்றி வந்த ஒற்றை காட்டு யானை நாகமாவை தாக்கியதில் படு காயமடைந்து நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு அனுப்பி வைத்துள்ளனர்.