பாண்டமங்கலம் அருகே கீற்றுக்கொட்டகையில் தீ பிடித்து சரக்கு ஆட்டோ, தேங்காய் நார் எரிந்து சேதம்

பாண்டமங்கலம் அருகே கீற்றுக்கொட்டகையில் தீ பிடித்து சரக்கு ஆட்டோ, தேங்காய் நார் எரிந்து சேதம்

Update: 2025-01-11 13:46 GMT
பரமத்திவேலூர், ஜன.11: பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே பூசாரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவடிவேல் (45). இவர் வீட்டின் அருகே கீற்றுக்கொட்டகை அமைத்திருந்தார். அதில் தேங்காய் நார் குவித்து வைத்திருந்தார். அதன் அருகில் அவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் தேங்காய் நாரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து அருகில் நிறுத்தி இருந்த சரக்கு ஆட்டோவில் தீப்பற்றி கீற்று கொட்டையிலும் எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை இது குறித்து சுந்தரவடிவேல் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று சரக்கு ஆட்டோ மற்றும் கீற்றுக் கொட்டகை, தேங்காய் நார் ஆகியவற்றில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

Similar News