கிருஷ்ணகிரி: கஞ்சா வைத்திருந்தவருக்கு காப்பு
கிருஷ்ணகிரி: கஞ்சா வைத்திருந்தவருக்கு காப்பு
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் 5 ரோடு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருப்பது கண்டுபிடிக்கபட்டது. இதை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பர்கூர் அருகே உள்ள நாயக்கனூர் பகுதியை சேர்ந்த ஜலபதி (20) என தெரிய வந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.