சூலூர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா !

கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா கோளாக்கலமாக நடைபெற்றது.

Update: 2025-01-12 04:17 GMT
சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. வட்டாட்சியர் தனசேகர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், வருவாய்த் துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.விழாவில் பல்வேறு பாரம்பரிய போட்டிகள், மேளதாளம், ஆட்டம், பாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தின. பறை இசை, துடும்பு ஆட்டம், மியூசிக்கல் சேர் உறி அடித்தல் போன்ற போட்டிகளில் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு வட்டாட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இவ்விழாவில் பேசிய பணியாளர்கள், வட்டாட்சியர் தனசேகர் பணியாளர்களுடன் இணைந்து விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் பணியாளர்களிடையே ஒற்றுமையை மேம்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Similar News

தீ விபத்து