ஆண் சிசு உயிரிழப்பு காவலர்கள் விசாரணை

பிறந்து பத்து நாட்களான ஆண் சிசு உயிரிழப்பு கம்பைநல்லூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை

Update: 2025-01-13 02:38 GMT
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கெலவள்ளிபுதூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜய்குமார். இவரது மனைவி சுவேதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுவேதாவை, பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த 2ம்தேதி ஆண் குழந்தை பிறந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் தாயும், சேயும் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். இதனிடையே, நேற்று முன்தினம் குழந்தைக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனால், குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, குழந்தை நேற்று உயிரிழந்தது. இதுபற்றி கம்பைநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News