ஆற்காடு சிவன் கோவில் ஆருத்ரா பூஜை!
ஆற்காடு அன்னபூரணி ஈஸ்வரர் கோவில் ஆருத்ரா பூஜை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத ஈஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாதம் ஆருத்ரா மகா அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பஜனை பாடல்களைப் பாடி சுவாமியை வழிபட்டனர். மேலும் இந்த பூஜைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.