சிவகிரியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது
திமுக சார்பில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூர் கழக திமுக சார்பில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் அனைவரும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூர் கழக திமுக சார்பில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக சிவகிரி கழக செயலாளரும், மாநில மருத்துவர் அணி துணை செயலாளருமான டாக்டர். செண்பக விநாயகம் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் பங்கு பெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சமத்துவ சீருடை அணிந்து 100 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா தலைமையேற்று தொடங்கி வைத்தார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி. சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.