ஆலங்குளத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல்
தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல்
தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி சமத்துவ பொங்கல் நலத்திட்டம் வழங்கல் ஜனவரி -13 தென்காசி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட மகளிரணி தலைவி முத்து செல்வி தலைமையில் வழங்கப்பட்டது. பின் மகளிர்க்கான கோலப்பொட்டி நடைபெற்று பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிர்வாகிகள் அலெக்ஸ் கண்ணன், தொகுதி பொறுப்பாளர் ராஜதுரை புதுப்பட்டி மணிகண்டன், கலா, பரமேஷ்வரி, முத்து மீனாட்சி, ஈஸ்வரி சீதா, சித்ரா, வித்யா உள்ளிட்ட ஏராளமான தமிழக கட்சிகளாக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.