மேலூர் அருகே சமத்துவப் பொங்கல்.
மதுரை மேலூர் அருகே சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அ.வல்லாளபட்டி பேரூராட்சி சமத்துவ பொங்கல் விழா இன்று( ஜன.13) நடைபெற்றது. இதில் தலைவர் ரா.குமரன், துணைத்தலைவர் வீ.கலைவாணன், பேரூர் திமுக செயலாளர்,வ.கார்த்திகேயன், கவுன்சிலர் எம்.ரஹமத்துல்லா, கவுன்சிலர் ரூக்மணி திலகர் செயல் அலுவலர்,ந.சசிகலா மற்றும் பேரூராட்சி அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் அனைவருக்கும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.