அனுமதியின்றி வைக்கப்பட்ட பெருமாள் சிலையால் பரபரப்பு!
சோளிங்கரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பெருமாள் சிலை அகற்றம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள யோக ஸ்ரீ நரசிம்மர் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் இரவோடு இரவாக மர்மபர்கள் சிலர், கருப்பு நிற கிரானைட் கல்லால் ஆன 15 அடி உயர, பெருமாள் சிலையை நிறுவி பூஜை செய்தனர். இதையடுத்து, அனுமதியின்றி வைத்த இந்த சிலையை அதிகாரிகள், அகற்ற முயற்சித்த போது, மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கும் பொருட் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.