அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலி

மதுரை மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலியானார்.

Update: 2025-01-13 06:20 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்கு நாவினிப்பட்டி பெரி கற்பூரம் பட்டியை சேர்ந்த அழகன்( 70) என்பவர் நேற்று முன்தினம் (ஜன.11) இரவு 7 மணி அளவில் மதுரை - திருச்சி நான்குவழிச் சாலையில் மேலூர் அருகே உள்ள சபரி ஹோட்டல் எதிரே உள்ள பெட்டிக்கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் கார்த்திக் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தினை ஏற்படுத்திய நபரை தேடி வருகிறார்கள்.

Similar News