மனைவி மாயம் என கணவர் புகார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் இளம் பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அந்தோணி நிஷாந்த்(30) மற்றும் அவரது மனைவி ஷனீஸ் வயது 23 ஆகியோர் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் நேற்று பொங்கல் விடுமுறைக்காக கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்த பொழுது திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஷனிஸ் பாத்ரூம் சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வரவில்லை. அப் பகுதியில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.பின்னர் கணவர் அந்தோணி நிஷாந்த் நேற்று (ஜன. 12) மாலை திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார் போலீச மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்