அல்லாள இளைய நாயகர் பிறந்தநாள் முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

அல்லாள இளைய நாயகர் பிறந்தநாள் முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.;

Update: 2025-01-13 14:10 GMT
பரமத்தி வேலூர்,ஜன.13: பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் முதன்முதலாக கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளை ஆண்ட அல்லாள இளைய நாயகா் என்ற குறுநில மன்னா் 1623-ஆம் ஆண்டு ஜேடா்பாளையத்தில் இருந்து சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு ராஜ வாய்க்காலை வெட்டினாா். இந்த ராஜ வாய்க்கால் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் இன்று வரை பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ராஜ வாய்க்காலை அமைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பாசன வசதி பெற்றுத்தந்த அல்லாள இளைய நாயகருக்கு, திருவுருவச் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அன்றைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சுமாா் ரூ.22 லட்சத்தில் மணிமண்டபம் மற்றும் திருவுருவச் சிலை அமைக்க ஆணை பிறப்பித்தாா். இப்படி ஒரு 22 லட்சம் செலவில் மணி மண்டபம் மற்றும் அல்லாள இளைய நாயகரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் ஜனவரி 14-ம் தேதி அல்லாள இளைய நாயகரின் பிறந்தநாள் அரசு விழாவாக முதல்முறையாக கொண்டாடப்படுகிறது. விழாவானது மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நாளை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது. விழாவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அல்லாள இளைய நாயகரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் நாளை அவரது திருவருட்சிலைக்கு மாலை அணிவிக்க இருப்பதால் நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் குறித்து இன்று பார்வையிட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணா விழாவிற்கு வருவோர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். காவல்துறை சார்பில் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி விழாவில் கலந்து கொள்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். மஞ்சள் நிற பதிவு கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்றும் அதில் ஒருவர்கள் அந்த வாகனத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விழாவில் கலந்து கொண்டு மீண்டும் செல்ல ஏதுவாக வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் சேர்ந்தவர்கள் காவல்துறை தெரிவித்துள்ள வழிகளில் சென்று பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வழி வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களில் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் எனவும் அதற்கு அபராத விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News