பரமத்தி வேலூரில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாட்டுக்கோழி விலை உயர்வு.
பரமத்தி வேலூரில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாட்டுக்கோழி விலை உயர்வு.
பரமத்தி வேலூர்,ஜன.13- பரமத்தி வேலூர் நாட்டுக் கோழி சந்தையில் நாட்டுக்கோழி விலை உயர்வடைந்துள்ளதால் நாட்டுக்கோழி வளர்ப் பாளர்கள் மகிழ்ச்சி அடை ந்துள்ளனர். பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான சண்டை மற்றும் இறைச்சி க்காக பயன்படுத்தப்படும் கோழிகள் வீடு மற்றும் தோட்டங்களில் வளர்க்கப் பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை பரமத்தி வேலூ ரில் நடைபெற்ற நாட் டுக்கோழி சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், வேலாயுதம்பாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், சோழ சிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். பரமத்தி வேலூர் நாட்டுக்கோழி சந்தை க்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக் கோழிகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.500- க்கு விற்பனையான நாட்டுக்கோழி நேற்று நடைபெற்ற சந்தையில் கிலோ ஒன்று ரூ.650 வரையிலும் விற்பனையானது, பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கடந்த வாரம் கிலோ ரூ.300 விற்ப னையானது. ஆனால் நேற்று ரூ.400 வரையிலும் விற்பனையானது. சண்டைக்காக வளர்க்கப்படும் சேவல்கள் ஒன்று ரூ.3 ஆயிரம் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை யானது. நாட்டுக்கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகள் விலை உயர் வடைந்துள்ளதாக தெரிவித்தனர். வியாபாரிகள் இதுகுறித்து வியாபாரி கூறுகையில்: இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கரிநாள் வருகிறதால் இந்த விலை ஏற்றத்திற்கு கூறினார்கள். காரணம் என்று