உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.......

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.......

Update: 2025-01-14 13:51 GMT
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்....... மாவட்ட ஆட்சியர் குத்துக் விலக்கு மற்றும் உரியடித்து துவங்கி வைத்து தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு உற்சாகம்... தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் புது பானையில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடப் படுவது வழக்கம், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உரியடித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு கயிறு இழுக்கும் போட்டி, உறியடிப் போட்டி மற்றும் கோல போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு ஆட்ச்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார் மேலும் சுற்றுலா பயணிகள் இவ்விழாவில் கலந்து கொண்டு நடனமாடி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்

Similar News