நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பண்பாடு மாறாமல் கலை கட்டிய பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடிய காணும் பொங்கல் விழா...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பண்பாடு மாறாமல் கலை கட்டிய பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடிய காணும் பொங்கல் விழா...;
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பண்பாடு மாறாமல் கலை கட்டிய பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடிய காணும் பொங்கல் விழா... தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை ஒட்டி நீலகிரி மாவட்டம் முழுதும் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நகரப் பகுதிகள் முதல் பழங்குடி மக்கள் வசிக்கின்ற மலை கிராமங்கள் வரை வீடுகளில் கரும்புகள் கட்டி மண் பானைகளில் புத்தரிசி பொங்கல் இட்டு வாசல்களில் கோலமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து பழங்குடியின மக்கள் வாழும் வனப்பகுதியில் வனதெய்வங்களுக்கு நன்றி சொல்லும் வகையில் பழங்குடியின மக்கள் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது.இதில் கோத்தகிரி பகுதியில் உள்ள பழங்குடியினர் வசிக்கின்ற வனப்பகுதியில் பழங்குடியினர் கிராமங்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய விழாவாக பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.இதில் கோழிக்கரை,மாமரம், சுண்டப்பட்டி,வாகப்பணை, செம்மனாரை உள்ளிட்ட இருளர் பழங்குடி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செம்மனாரை பகுதியில் தமது குலதெய்வ வழிபாடாக இயற்கை தெய்வங்களுக்கு பொங்கலிட்டு காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பழங்குடியினர்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க பாடல்கள் பாடி தமது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். மண் மனம் மாறாமல் சிறுவர்களுக்கு விளையாட்டு,நடனம் மற்றும் வழுகக்குமரம் ஏறுதல்,உறியடி போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன.