நீலகிரி மாவட்ட கோத்தர் இன மக்கள் தங்களின் குலதெய்வத்தை வழிபட்டு கோத்தர் இன ஆண்கள், பெண்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிந்தும், கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர்

கோத்தர் இன மக்கள் தங்களின் குலதெய்வத்தை வழிபட்டு கோத்தர் இன ஆண்கள், பெண்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிந்தும், கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர்;

Update: 2025-01-16 11:32 GMT
நீலகிரி மாவட்டம் கொல்லிமலையில் பூர்வக்குடி மக்களான கோத்தர் இன பழங்குடியின மக்கள் தங்களின் குலதெய்வமான கம்பட்ராயர் திருவிழாவை  பாரம்பரிய நடனத்துடன் 9 ம் நாள் நிகழ்வு  நடைபெற்றது... கோத்தர் இன மக்கள் தங்களின் குலதெய்வத்தை வழிபட்டு கோத்தர் இன ஆண்கள், பெண்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிந்தும், கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர்... நீலகிரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட கோத்தர் இன பழங்குடியின மக்கள் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில்  தங்களின் குலதெய்வ கம்பட்ராயர்  பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த குலதெய்வ கோவில் விழாவில் கோத்தர் இன மக்கள் வாழும் அனைத்து கிராமங்களிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து  ஐய்னோர்,அம்னோர் தெய்வங்களுக்கு  பொங்கல் வைத்து படைப்பர்.பொங்கல் வைத்து குலதெய்வங்களுக்கு   படையல் இட்டு வழிப்பட்ட நிகழ்வு முடிவடைந்த   நிலையில்,இவர்களின் குலதெய்வ  பண்டிகையில் முக்கிய நிகழ்வாக 9 ம் நாள் திருவிழாவாக உதகை அருகேயுள்ள  கோத்தர் இன மக்கள் வாழும் கொல்லிமலை கிராமத்தில் கம்பட்ராயர் குலதெய்வ திருவிழா சிறப்பாக நடைபெற்றது‌. இந்நிகழ்வில்  ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என தங்களின் பாரம்பரிய வெள்ளை நிற உடை அணிந்து கலந்து கொண்டனர். தங்களின் கலாச்சார இசை இசைத்து ஆண்கள்,பெண்கள் என தங்களின் கிராமத்தில் உள்ள மையப்பகுதியில் பாரம்பரிய கலாச்சார நடனமாடினார்.குறிப்பாக பண்டைய காலக்கட்டத்தில் வாழ்ந்த ராஜாக்கள் காலத்தின் உடை அணிந்து தங்களின் கலாச்சார நடனம் ஆடியது அனைவரின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்தது. இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் கோத்தர் இன பழங்குடியின மக்களுடன்,படுகர் சமுதாய மக்களும் பாரம்பரிய கலாச்சார இசைக்கு ஏற்றவாறு  பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

Similar News