விடுமுறை தினத்தில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலையம் மற்றும் ஊதியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மதுக்கடை பார் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.;
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலையம் மற்றும் ஊதியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மதுக்கடை பார் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து மதுபான கடைகளுக்கும் 15.01.2025 விடுமுறை அறிவித்திருந்தது. ஆனால் காங்கேயம் காவல் நிலையம் மற்றும் ஊதியூர் காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட மதுபான பார்களிலும் நேற்றைய தினம் 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோராக நடைபெற்றது. கொடுவாய் தனியார் பாரில் நேற்றைய தினம் மது கேட்டு வருவர்களுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. 20 பேர் முதல் 25 பேர் மது வாங்க சேர்ந்தவுடன் மதுபான பாட்டில்கள் எடுத்து வந்து அமோக விற்பனை. இந்த மதுபான ஏ.சி.பார் சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த விவசாயிகள் மூன்று பேர் வெட்டிக் கொல்லப்பட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கயம்- தாராபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடை எண்:3886 பாரில் பின்னால் வைத்து மது அமோகமாக விற்பனை நடைபெற்றது . வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்குவதில் இடையூறு ஏற்படாதவண்ணம் கூகுள் பே (google pay ) வசதியுடன் விற்பனை நடைபெற்றது. காங்கேயம் காவல் நிலையத்திலிருந்து சரியாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கடை என்பது குறிப்பிடதக்கது. நேற்றைய தினம் விடுமுறை விடாமல் பணி நாட்களாக இருந்திருந்தால் மது பிரியர்களுக்கு அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது. மேற்கண்ட கடைகளைப் போன்று அனைத்து மதுபான பார்களுக்கு பின்பக்கமாகவும், பார்களுக்கு அருகாமையிலும் அனைத்து இடங்களிலும் மதுபானம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பரபரப்பி ஏற்படுத்தி வருகின்றது. இங்கு விற்பனை நடைபெற்றதை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லையா? அல்லது விற்பனை நடைபெற்றதே தெரியவில்லையா என பொதுமக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.