ஆரணி நகரம், ஒன்றியத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா.

ஆரணி நகரம் மற்றும் ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை எம்ஜிஆர் பிறந்த நாள் விழா முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர்;

Update: 2025-01-17 09:50 GMT
ஆரணி நகரம் மற்றும் ஒன்றியங்களில் எம்ஜிஆர் 108வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர். ஆரணி நகரம். ஆரணி அண்ணாசிலை அருகிலிருந்து மாவட்டசெயலாளர் எல்.ஜெயசுதா தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று ஆரணி பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்டஅவைத்தலைவர் அ.கோவிந்தராசன், நகரசெயலாளர் அசோக்குமார், ஜெ பேரவை மாவட்டசெயலாளர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், க.சங்கர், எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி ஏ.ஜி.ஆனந்தன், மாவட்டஇணைசெயலாளர் வனிதாசதீஷ், சிறுபான்மை நலபிரிவு மாவட்டசெயலாளர் கே.உசேன்ஷெரீப், மாவட்ட பொருளாளர் அரையாளம் எம்.வேலு, நகரமன்ற உறுப்பினர்கள் சுதாகுமார், கிருபா சமுத்ரி சதீஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆரணி ஒன்றியம். ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆரணி தெற்கு ஒன்றியம். ஆரணி தெற்கு ஒன்றியத்தைச்சேர்ந்த அக்கூர் கிராமத்தில் ஒன்றியசெயலாளர் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் எம்ஜிஆர் சிலை்க்கு மாலை அணிவித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்டசெயலாளர் எல்.ஜெயசுதா கலந்துகொண்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். மேலும் மாவட்டசெயலாளர் முன்னிலையில் பிற கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் சிலர் இணைந்தனர். உடன் கட்சியினர் கலந்துகொண்டனர். பின்னர் இதே ஒன்றியத்தைச் சேர்ந்த நேத்தபாக்கம் கிராமத்தில் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் ஞானப்பிரகாசம் தலைமையில் எம்ஜிஆர் உருவ படத்திற்கு மலர் தூவி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Similar News