துளிகள் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
காங்கேயம் துளிகள் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா;
காங்கேயம் துளிகள் அமைப்பின் சார்பில் பல கட்டங்களாக 36 ஆயிரத்து 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் அதை பராமரித்தும் வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் 152வது கட்டமாக மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் கீரனூர் கிராமம் செல்லப்பம்பாளையம், ரெட்டி வலசில் உள்ள விநாயகர், மாகாளியம்மன் மற்றும் முனியப்ப சாமி கோவில் வளாகத்தில் கீரனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள், துளிகள் அமைப்பு நிர்வாகிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.