உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்................
உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்................;
உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்................ நீண்ட வரிசையில் காத்திருந்து படகுகளில் குடும்பத்துடன் சவாரி செய்து மகிழ்ந்து வரும் சுற்றுலா பயணிகள்... தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆறு நாட்கள் தொடர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களில் மிக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக உதகை படகு இல்ல ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு பிடித்த மோட்டார் படகு, துடுப்பு படகு, மிதிபடகு ஆகிய படகுகளில் குடும்பத்துடன் சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்ப குடும்பமாய் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்