திமுகவினருக்கு எம்எல்ஏ அழைப்பு.

மதுரை திமுகவினருக்கு தளபதி எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2025-01-18 11:46 GMT
மதுரை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் குறித்து மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மதுரை மாநகர் மாவட்டக் திமுக செயற்குழு கூட்டம் 20.01.2025 திங்கள்கிழமை மாலை 05.30 மணி அளவில் பசுமலை கோபால்சாமி திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் மா.ஒச்சுபாலு அவர்கள் தலைமையில் நடைபெற இருப்பதால் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட செயலாளர்கள், ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், திமுங முன்னோடிகள் மற்றும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகை குறித்து ஆலோசனை நடக்கவுள்ளதாக தெரிகிறது.

Similar News