இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
திண்டுக்கல் அருகே திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
திண்டுக்கல், கொட்டபட்டி, ஜெயந்தி காலனி பகுதியை சேர்ந்த ஜெனிபர்(22) இவரும் இவரது கணவர் ஜெயபாலனும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் ஜெனிபர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ஜெனிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஜெனிபரின் பெற்றோர்கள் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், திண்டுக்கல் ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.