இரு தரப்பினரையே மோதல் ஐந்து வீடுகள் சேதம் ஒருவருக்கு மண்டை உடைப்பு
விசிக தலைவர் தொல் திருமாவளவன் உறவினர் ஒருவர் 5 பேர் வீடுகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி போலீசார் குவிப்பு.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தில் இரு தரப்பினருக்குள் மோதல். விசிக தலைவர் தொல் திருமாவளவன் உறவினர் ஒருவர் 5 பேர் வீடுகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி போலீசார் குவிப்பு. கண்டு கொள்ளாத காவல்துறை. எதிராக வாக்களித்ததால் தொடர்ந்து தங்களது வீடுகளை சூறையாடும் திருமாவளவன் கட்சியினர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திருமாந்துறை காலனி தெருவில் பட்டியல் சமூகத்தினர் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் உறவினர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் இளையராஜா என்பவர். பொதுமக்கள் செல்லமுத்து, கொளஞ்சி, அண்ணாதுரை, ராஜ்குமார், செல்வராஜ் ஆகிய 5 பேர் வீடுகள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் டிவி வீட்டில் உள்ள பொருட்கள். அடித்து நொறுக்கி பொருட்களை சூறையாடினர். மேலும் தங்களது எதிராக வாக்களித்தததால் தொடர்ந்து விசிகவினர் வீடுகளை சூறையாடுவதாகவும், தொடர்கதையாகி வருவதாகவும், புகார் கொடுத்தால் மங்களமேடு காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தாக்குதலில் அம்சவள்ளி செல்லம் செம்பருத்தி ஆகிய மூன்று படுகாயமடைந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதோடு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.