மலை மேல் தீபம் ஏற்ற இந்து முன்னணி முயற்சி
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் முயன்ற இந்து முன்னணியினரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று (ஜன.18)மாலை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரர் சுப்பிரமணியம் கையில் வேல் ஏந்தி அவரது தலைமையில் 300க்கும் மேற்பட்ட இந்து முன்னணிதொண்டர்கள் திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்தில் இருந்து மலையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். மலை மேல் தீபம் ஏற்ற காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் கோஷமிட்டவாறு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றனர் . சாமி தரிசனத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வர சுப்பிரமணியம் கூறியதாவது திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் கடந்த 30 ஆண்டுகளாக அறநிலையத்துறையினர் தீபம் ஏற்ற மறுத்து வருகின்றனர்.இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.தற்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலையை ஒரு சிலர் சிக்கந்தர் மலை என கூறுவருகின்றனர். இந்துக்கள் புனிதமாக கருதப்படும் மலை மேல் ஆடு ,கோழி உயிர் பலியிட முயற்சி செய்கின்றனர்.இந்து முன்னணி சார்பில் அனைத்து இந்து மக்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.