வீட்டில் புகுந்த நல்ல பாம்பு மீட்பு

வீட்டில் புகுந்த நல்ல பாம்பு;

Update: 2025-01-19 05:17 GMT
வானூர் அடுத்த தைலாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு நான்கு அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. அதனைக் கண்ட ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்த வானுார் தீயணைப்பு நிலைய அலுவலர் முகுந்தன் தலைமையில் தீயணைப்பாளர்கள் விரைந்து சென்று, பாம்பை பிடித்து, அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

Similar News