எய்யில் கிராமத்தில் பொங்கல் கிரிக்கெட் போட்டி

பொங்கல் கிரிக்கெட் போட்டி;

Update: 2025-01-19 05:23 GMT
மேல்மலையனுார் அடுத்த எய்யில் கிராமத்தில் அம்பேத்கர் கிரிக்கெட் கிளப் சார்பில் 13வது ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழ்மொழிராஜதத்தன் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. நான்கு நாட்கள் நடந்த இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை எய்யில் அம்பேத்கர் கிரிக்கெட் கிளப் அணியும், 2ம் இடத்தை எரும்பூண்டி கே.சி.சி., கிரிக்கெட் அணியும், 3ம் இடத்தை கீரந்தப்பட்டு டாப்ஸ்டார் அணியும், 4ம் இடத்தை மங்கலம் என்.சி.சி., அணியினரும் பிடித்தனர். இவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி பொருளாளர் அருண்தத்தன் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் செந்தாமரை கெம்பீரம், வழக்கறிஞர் லோகநாதன், சமூக ஆர்வலர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News