கல்லுாரி மாணவி தற்கொலை

துயரச் செய்திகள்;

Update: 2025-01-19 06:03 GMT
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள மட்டங்கலை சேர்ந்த பாக்கியராஜ் மகள் ஜெயஸ்ரீ (18). புதுக்கோட்டையில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லுாரியில் இளங்கலை முத லாமாண்டு படித்து வந்தார். கடந்த 11ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுஇது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News