ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி மாயம்
மதுரை மேலூர் அருகே பள்ளி மாணவி மாயம் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்ன அடைக்கலத்தின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் நேற்று முன்தினம். (ஜன.17) மதியம் விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று அவரது தந்தை மேலவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவி தேடி வருகிறார்கள்.