கடும் மேகமூட்டத்தால்வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றனர்....

கடும் மேகமூட்டத்தால்வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றனர்;

Update: 2025-01-19 08:18 GMT
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி குன்னூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மேகமூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்தது கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.... வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றனர்.... நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மேகமூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை பெய்து வருகிறது குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது இதனால் வாகன ஒட்டிகள் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு பயணித்தன அதேபோல் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் மேகமூட்டம் காணப்பட்டதால் மலைப்பாதையில் பயணித்தவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது தொடர்ந்து கோத்தகிரி, உதகை, குன்னூர் பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பல பகுதிகளில் இளைஞர்கள் விளையாட மைதானங்களுக்கு வரும் நிலையில் மேகமூட்டத்துடன் சாரல் மழையால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது இந்த காலநிலை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இந்த இதமான காலநிலையை அனுபவித்த வாரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்

Similar News